2019 ஆம் ஆண்டு செவ்ரோலெட் கேமரோ மாடலின் படங்கள்

செவ்ரோலெட் நிறுவனம் அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு கேமரோ மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் ஏராளமான ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம். 

இந்த மாடல் ஏற்கனவே கிடைக்கும் அதே V8 எஞ்சினிலும், புதிய ஆரம்ப நிலை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் எஞ்சினிலும் கிடைக்கும். இந்த எஞ்சின் 275Bhp திறனையும் 400Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் மனுவால் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

செவ்ரோலெட் நிறுவனம் இந்தியாவில் கார் மாடல்களை விற்பனை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.