புதிய நான்காம் தலைமுறை சுசூகி ஜிம்னி மாடலின் படங்கள்

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நான்காம் தலைமுறை சுசூகி ஜிம்னி மாடல் ஜப்பான் சந்தையில் அதிகாரப்பூரவமாக வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 சுசூகி ஜிம்னி மாடலின் சோதனை ஒட்டப்படங்கள் ஏற்கனவே நிறைய முறை இணையத்தில் கசிந்தது, மேலும் இந்த மாடலின் பிரௌசர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. 019 ஆம் ஆண்டு சுசூகி ஜிம்னி மாடல் முழுவதும் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

2019 சுசூகி ஜிம்னி மாடல் வெளிப்புறம் முழுவதும் புதிதாக கம்பீரமான தோற்றத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தய மாடல் போலவே பாடி ஆன் பிரேம் எனும் முறையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் LED ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், டர்ன் இண்டிகேட்டர் உடன் கூடிய பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் சில வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறத்தில் பலேனோ, இக்னிஸ் மற்றும் ஸ்விப்ட் மாடல்களின் பாகங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மூன்று காதவுகளுடன் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2019 சுசூகி ஜிம்னி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த என்ஜின் 102BHP (6000 RPM) திறனும் 130NM (4000RPM) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் நான்கு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் நான்கு வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஜிம்னி மற்றும் ஜிம்னி சியரா என இரண்டு விதங்களில் கிடைக்கும். ஜிம்னி சியரா மாடலில் கூடுதல் கிளாடிங் மற்றும் அகலமான டயர் என ஆஃப்ரோடு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

 

இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.