லம்போர்கினி உரஸ் ST-X ட்ராக் வெர்சன் கான்செப்ட் மாடலின் படங்கள்

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, உரஸ் ஹைப்பர் SUV மாடலின் ட்ராக் வெர்சன் கான்செப்ட் மாடலான உரஸ் ST-X மாடலை வெளிப்படுத்தியுள்ளது.  இந்த மாடலை ட்ராக்கில் மட்டுமே இயக்க முடியும்.  இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், மேலும் சிறந்த செயல்திறனுக்காக இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 641Bhp @6000rpm திறனையும் 850Nm @2250-4500rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் திறன் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலின் எடை 25% வரை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.