2020 ஜீப் கிளாடியேட்டர் மாடலின் படங்கள்

ஜீப் நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்திய மேம்படுத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டு கிளாடியேட்டர் மாடலின் படங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

இந்த மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் V6 பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் V6 டீசல் என்ஜின்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் 281Bhp திறனையும் 553Nm இழுவைத்திறனையும் மற்றும் டீசல் என்ஜின் 256Bhp திறனையும் 600Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நான்கு வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும். 

இந்த மாடலில் பிளைன்ட் ஸ்பாட் மானிடரிங், முன்புற ஆப் ரோடு கேமரா, பின்புற பார்க்கிங் கேமரா, அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் எலெட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் Sport, Sport S, Overland மற்றும் Rubicon என நான்கு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் அடுத்த வருட மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.