தனது முதல் எலெக்ட்ரிக் ட்ரக் மாடலை வெளிப்படுத்தியது டெஸ்லா

டெஸ்லா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ட்ரக் மாடலான செமி ட்ரக் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. ஏரோ டைனமிக், அதிக சொகுசு, வித்தியாசமான வடிவமைப்பு என அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்த ட்ரக் மாடலை வடிவமைத்துள்ளது டெஸ்லா நிறுவனம்.

வடிவமைப்பு மட்டுமின்றி செயல்திறனில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது அந்த ட்ரக் மாடலின் விவரங்களில் இருந்தே தெரிகிறது. இந்த ட்ரக் மாடல் பாரம் ஏதும் இல்லாமல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 வினாடிகளில் கடந்து விடும். மேலும் முழுமையான 36 டன் பாரத்துடன் வெறும் 20 வினாடிகளில் கடந்து விடும். இவை அனைத்தும் அமெரிக்காவில் இருக்கும் டீசல் ட்ரக்கை விடை அதிகம் எனவும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ட்ரக் மாடலில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்கள் தான் ஆகும் எனவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், அடானமஸ் டிரைவிங் என ஏராளமான தொழிலநுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் விபத்தின் பொது தீப்பற்றாமல் இருக்க ரீஇன்போர்ஸ் செய்யப்பட்ட பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் கியர் ஷிபிட் லிவர் கொடுக்கப்படவில்லை. மேலும் இந்த மாடலின் உட்புறம் நிறைய பாகங்கள் மாடல் 3 இல் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.