2019 ஆம் ஆண்டு இந்தியன் ஸ்கௌட் சீரீஸ் மாடல்களின் படங்கள்

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு ஸ்கௌட் சிக்ஸ்டி, ஸ்கௌட் மற்றும் ஸ்கௌட் பாபர் மாடல்களை உலகளவில் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த மாடல்களில் புதிய வண்ணம், USB சார்ஜிங் போர்ட் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. 

இந்தியன் ஸ்கௌட் சிக்ஸ்டி மாடலில் 999 cc கொள்ளளவு கொண்ட லிக்யூட் கூல்ட் V - ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 78 Bhp திறனையும் 89 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 298 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் இரண்டு வீலிலும் பொருத்தப்பட்டுள்ளது.

Indian Scout Sixty Color Options

Indian Scout Color Options

Indian Scout Bobber Color Options

இந்தியன் ஸ்கௌட் மற்றும் ஸ்கௌட் பாபர் மாடலில் 1133 cc கொள்ளளவு கொண்ட லிக்யூட் கூல்ட் V - ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 Bhp திறனையும் 97.7 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த என்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 298 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் இரண்டு வீலிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அணைத்து மாடலிலும் ABS நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.