ஹீரோ - HX250R

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஹீரோ நிறுவனத்தால்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடல்  ஹீரோ - HX250R. இது ஸ்போர்ட்ஸ் டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இரட்டை முன்புற முகப்பு விளக்குகள், இருக்கை அடியில் கொடுக்கப்பட்டுள்ள புகை போக்கி என மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 250CC கொள்ளளவு கொண்ட ஆயில் கூலுட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 31 bhp திறனும் 28 Nm இழுவை திறனும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.