ஹீரோ - RNT

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஹீரோ நிறுவனத்தால் ஹீரோ - RNT  மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் புதுமையான கான்செப்ட் மாடல். 

இந்த மாடலில் 150 CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 13 bhp திறனும் 35 Nm இழுவை திறனும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஹைப்ரிட் மாடல் ஆகும்.

இந்த மாடல் தொடர்பான விவரங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை. இந்த மாடல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான விலையில் 2015 இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் வெளிவாந்தால் ஆட்டோமொபைல் துறையில் ஒரு  மைல்கல்லாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.