ஹீரோ XPulse

இந்தியாவின் மிகப்பெரிய பைக் நிறுவனமான ஹீரோ, 2017 ஆம் ஆண்டு EICMA மோட்டார் கண்காட்சியில்  XPulse எனும் புதிய அட்வென்ச்சர் பைக் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இந்த மாடலில் 200cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் தான் விரைவில் வெளியிடப்படவிருக்கும் எக்ஸ்ட்ரீம் 200 மாடலிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செயல்திறன் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் ABS பிரேக் சிஸ்டத்துடனும் வெளியிடப்படும். 

இந்த மாடல் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வருட இறுதிக்குள் இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். மாருதி நெக்ஸா ஷோரூம்கள் போல ஹீரோ நிறுவனமும் ப்ரீமியம் பைக் மாடல்களுக்கென பிரத்தியேக டீலர் அமைப்பை தொடங்க இருப்பதாக இந்த மாடல் வெளியிட்டு விழாவில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.