இந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750

சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் GSX-S750 மோட்டார் பைக் மாடலை ரூ 7.45 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுசூகி ஹயபுஸா மாடலை தொடர்ந்து இந்த மாடலும் இந்தியாவில் CKD வழியாக வெளியிடப்பட உள்ளது. 

இந்த மாடலில் 749 cc கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 113 bhp @ 10,500 rpm திறனையும் 81 Nm @ 9,500 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் முன்புறத்தில் 41 மில்லி மீட்டர் கயபா போர்க்கும் பின்புறத்தில் ஏழு ஸ்டெப் கொண்ட மோனோ ஷாக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் மற்றும் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ட்ராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம், LCD டிஸ்பிளே மற்றும் LED முகப்பு விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு நேக்ட் மாடல் வகையை சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய 2018 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750 மாடலின் விநியோகம் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.