UM ரெனெகட் கமாண்டோ

UM  ரெனெகட் மாடல்களின் விநியோகம் ஜூன் மாதத்திலிருந்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 முன்பதிவுகளை கடந்துவிட்டதாகவும் UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

UM நிறுவனம் ரெனெகட் ஸ்போர்ட்ஸ் S , ரெனெகட் கமாண்டோ மற்றும் ரெனெகட்கிளாசிக் என மூன்று மாடல்களை 2016 டெல்லி வாகன கண்காட்சியில்  வெளியிட்டது. UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பைக்குகளை  வெளியிட இருக்கிறது.

இந்த மூன்று மாடளிலுமே 279 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25 Bhpதிறனையும் 21.8 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மூன்று மாடளுக்கும் இடையே சிறிய ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே இருக்கும்.  மேலும் இந்த மாடலின் சிறந்த வடிவமைப்பு, சிறந்த திறன்  மற்றும் குறைவான விலை ஆகிய காரணங்களால் பெரிய  வெற்றியை பெரும்  என்றே எதிர்பார்க்கபடுகிறது.

உத்தரகண்டில் உள்ள லோஹியா ஆட்டோ நிறுவன ஆலையில் இந்த மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த மாடல்களின் வெற்றியை தொடர்ந்து மற்ற மாடல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராயல் என்ஃபீல்ட்  மாடல்களுக்கு போட்டியாக UM ரெனெகட் கமாண்டோ மாடல்கள் இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.