இரண்டு புதிய மேட் வண்ணங்களில் வெளியிடப்பட்டது TVS விக்டர் ப்ரீமியம் எடிசன்

TVS நிறுவனம் மேட் சில்வர் மற்றும் மேட் ப்ளூ என இரண்டு புதிய வண்ணங்களில் விக்டர் ப்ரீமியம் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. TVS நிறுவனம்  கோல்ட் மற்றும் கருப்பு வண்ண கலவையிலான  விக்டர் ப்ரீமியம் எடிசன் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் கூடுதலாக புதிய இரட்டை வண்ண இருக்கையும், சில இடங்களில் குரோம் இன்செர்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடலில் அதே 109.7 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.6 bhp (7500 rpm) திறனும் 9.4 Nm (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 76 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.