டட்சன் கோ கிராஸ்

டட்சன் கோ கிராஸ் மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டட்சன் கோ மற்றும் கோ + கான்செப்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடல் 2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டட்சன் கோ மற்றும் கோ + மாடலை விட சிறப்பான தோற்றமும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கிராஸ் ஓவர் மாடல்களில் உள்ள அணைத்து அம்சமும் இதிலும் உள்ளது. பெரிய முகப்பு கிரில், LED முகப்பு விளக்குகள் பிளாஸ்டிக் கிளடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜின் தொடர்பான எந்த ஒரு விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால் கோ மற்றும் கோ + மாடலில் உள்ள தி 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.