ஃபியட் டிபோ

ஃபியட்  நிறுவனம் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் டிபோ மாடலை  வெளியிடும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த மாடல் மற்ற நாடுகளில் ஈகே என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இந்த மாடல் 4500 மில்லி மீட்டர் நீளமும், 1780 மில்லி மீட்டர் அகலமும், 1480 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2640 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது.

இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1.3 மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிஸ்டதிலும் கிடைக்கும். உட்புறத்தில்  டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் மேலும் ஃபியட் மாடலில் உள்ள அணைத்து சிறப்புகளும் இதிலும் உள்ளது.

இந்த மாடலை இந்தியாவில் வெளியிடுவது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் இதுவரை ஃபியட்  நிறுவனம் வெளியிடவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.