ஜீப் ரெனெகேட்

ஜீப் நிறுவனம் ரெனெகேட் மாடல் மிகச்சவாலான விலையில் அதாவது ரூ 11 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபியட்  நிறுவனம் ஜீப் ரெனெகேட் மாடலை இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது.இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். மேலும் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். 

மேலும் ஜீப் நிறுவனம் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட ஒரு காம்பேக்ட் SUV  மாடலையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபியட்  நிறுவனம்  ஜீப் பிராண்டை பிரபலப்படுத்த அதிக மாடல்களை தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.