நிசான் - GT - R

நிசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் GT - R மாடலையும் X - ட்ரைல் மாடலையும் வெளியிட இருக்கிறது. அதை தொடந்து 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான ஒரு காம்பேக்ட் செடான் மாடலையும் வெளியிட இருக்கிறது.

நிசான் GT - R மாடல் அதிக செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த மாடலில் 3.6 லிட்டர் ட்வின் டர்போ V 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 560 bhp திறனையும் 463 Nm இழுவைதிரனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும்.

இந்த மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் எனவும் மேலும் 2 கோடி விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.