நிசான் - X - ட்ரைல்

அடுத்த தலைமுறை X - ட்ரைல் SUV மாடலை நிசான் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில்  வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2013 ஆம்  ஆண்டு நடந்த ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. 

உட்புறம், வெளிப்புறம் மற்றும் என்ஜினிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.6 லிட்டர்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 127 bhp திறனையும் 320 Nm இழுவைதிரனையும் வழங்கும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸும் கிடைக்கும்.  மேலும் இந்த மாடல் 30 முதல் 35 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.