நிசான் கிக்ஸ்

நிசான் நிறுவனம் கிக்ஸ் மாடலின் உற்பத்தியை தனது மெக்சிகோ ஆலையில் தொடங்கியது. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் இதன் உற்பத்தி இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் தான் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாடலின் படங்கள் மட்டுமே இதுவரை  வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் டஸ்ட்டர் மாடலில் உள்ள எஞ்சினுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடல் மக்களிடம் மிகுந்த  வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.