டெஸ்லா மாடல் 3

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3  வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில்  பேசிய அந்நிறுவனத்தின் CEO இந்த மாடல் இந்தியா மற்றும் மேலும் சில நாடுகளிலும் வெளியிடப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மாடல் 3 உடன்  இந்தியாவில் விற்பனையை தொடங்க இருக்கிறது. இந்த மாடலின்  முன்பதிவு  ஏற்கனவே இந்தியாவில்  தொடங்கப்பட்டுவிட்டது.

இந்த மாடல் டெஸ்லா மாடல் S ன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் SUV  மாடல் ஆகும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 வினாடிகளுக்குள் கடந்து விடும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பதில் டெஸ்லா உலக புகழ் பெற்ற நிறுவனம். தற்போது இந்தியாவில் அதன் அத்தியாயத்தை தொடங்க இருக்கிறது.இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த மாடல் ஆடி A4, BMW  3 சீரீஸ், மெர்சிடிஸ் பென்ஸ் C - கிளாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். டெஸ்லா  நிருவனதின் மற்ற மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மத்திய அரசால் அதிக சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.