டொயோடா 2018 கேம்ரி

டொயோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய எட்டாம் தலைமுறை கேம்ரி மாடலை ஜப்பானில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஜப்பான் ஸ்பெக் மாடல் தான் இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த மாடல் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் டொயோடா நிறுவனத்தின் புதிய குளோபல் ஆர்கிடெக்ச்சர் TNGA  எனும் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இந்த மாடலும் முழுவதும் மறுவடிவம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் சஸ்பென்ஷன் கட்டமைப்பு என தொழில்நுட்பத்திலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளது அதே சமயம் இதன் வீல் பிஇஎஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4859 மிமீ நீளமும் 1839 மிமீ அகலமும் 1440 மிமீ உயரமும் மற்றும் 2825 மிமீ வீல் பேசும் கொண்டது.

உட்புறம் முழுவதும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் மென்மையான தொடுதல் உணர்வை தரும் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மட்டம் டொயோடாவின் புதிய ஹியூமன் இன்டெர்பேஸ் சிஸ்டம் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2.5 லிட்டர் மற்றும் 3.5 லிட்டர் எஞ்சினில் கிடைக்கிறது. இந்த இரண்டு எஞ்சினிலும் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2.5 லிட்டர் எஞ்சின் ஹைபிரிட் சிஸ்டத்துடனும் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.