மஹிந்திரா மராஸோ மாடலின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மஹிந்திரா நிறுவனம் U321 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வந்த MPV காரின் பெயரை மராஸோ என அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அந்த மாடல் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் சுறாவை (Shark) அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல XUV500 மாடலை சிறுத்தையின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டும் TUV300 மாடலை ராணுவ டேங்கை அடிப்படையாக கொண்டும் மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மராஸோ மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மடலில் புதிய எஞ்சின், புதிய சரௌண்ட் கூல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் வட அமெரிக்கா டிசைன் சென்டரில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் புதிய எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டது. மற்றபடி செயல்திறன் விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த மாடல் டொயோட்டா இன்னோவா மற்றும் டாடா ஹெக்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் தோராயமான விலை விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.