வெளியிடப்பட்டது இரட்டை வண்ண டொயோடா எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு மாடல்

டொயோட்டா நிறுவனம் இரட்டை வண்ணம் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் கொண்ட எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் VX வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் வெள்ளை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பெட்ரோல் மாடல் ரூ 6.51 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் மற்றும் டீசல் மாடல் ரூ 7.66 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய இரட்டை வண்ண டொயோடா எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு மாடலில் புதிய சிவப்பு வண்ண அலங்காரத்துடன் கூடிய முகப்பு கிரில், பம்பர், சிவப்பு வண்ண கைப்பிடிகள், சிவப்பு வண்ண கிராபிக்ஸ் மற்றும் உட்புறத்தில் சிவப்பட்டு வண்ண அலங்காரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் பின்புற கேமரா வசதியுடன் கூடிய 6.8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 80 bhp (5600 rpm) திறனும் 104Nm (3100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 17.71 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  மேலும் இதன்  என்ஜின் மாடல் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.59 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் சாதாரண மாடலை விட தோராயமாக ரூ 21,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.