2016 டெல்லி வாகன கண்காட்சி: XF3R எனும் புதிய கான்செப்டை அறிமுகப்படுத்தியது ஹீரோ

ஹீரோ நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் XF3R எனும் புத்தம் புதிய கான்செப்டை அறிமுகப்படுத்தியது. ஹீரோ நிறுவனம் இந்த மாடலை முற்றிலும் புதிய மற்றும் மிகவும் சிறப்பான முறையிலும் வடிவமைத்துள்ளது.

பின்புறம் ஒருபுறம் மட்டும் உள்ள பிரேம், பின்புற LED விளக்குகள், இருக்கைக்கு அடியில் உள்ள புகைபோக்கி மட்டும் மாறுபட்ட வடிவம் என ஹீரோ நிறுவனத்தின் பழைய பரினாமத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு புதிய வடிவமைப்பில் இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஹீரோ நிறுவனம். என்ஜின் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

அதேபோல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றியும் எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த மாடல் வெளியிடப்பட்டால் இது தான் ஹீரோ நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.