நோர்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை கையகப்படுத்தியது TVS

தமிழகத்தை சேர்ந்த TVS மோட்டார் நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த மிகப்பழமையான நோர்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. TVS நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ 153 கோடி மதிப்பில் நோர்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 நோர்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சில நாட்களாகவே கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்தது. மேலும்,  TVS மோட்டார் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்க முயற்சி செய்து வருவதாகவும் சில நாட்களாக செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நோர்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சில பைக் மாடல்களை இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் TVS மோட்டார் நிறுவனத்தின் சந்தை உலகளவில் விரிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.