2016 டெல்லி வாகன கண்காட்சி: என்டார்க் எனும் ரேசிங் ஸ்கூட்டர் கான்செப்டை காட்சிப்படுத்தியது TVS

டிவிஎஸ் நிறுவனம் ரேசிங் மாடல் மீது அதிக கவனத்தை தற்போது செலுத்தி வருகிறது. 2016 டெல்லி வாகன கண்காட்சியில் X21 மற்றும் அகுலா 310 ரேசிங் கான்செப்டுடன் என்டார்க் எனும் ரேசிங் ஸ்கூட்டர் கான்செப்டையும் காட்சிப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.

இந்த மாடல் ஒரு ரேசிங் பைக் போன்ற ஏரோ டைனமிக் வடிவத்தின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 212.5 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS ப்ரேக் மற்றும் GPS நேவிகேசன் வசதி கொண்ட ஸ்மார்ட் போனும் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.