2016 டெல்லி வாகன கண்காட்சி: 1.49 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது UM ரெனெகட் சீரிஸ் மாடல்கள்
இறுதியாக UM நிறுவனம் ரெனெகட் ஸ்போர்ட்ஸ் S , ரெனெகட் கமாண்டோ மற்றும் ரெனெகட்கிளாச்சிக் என மூன்று மாடல்களை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது. UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பைக்குகளை வெளியிட இருக்கிறது.
இந்த மூன்று மாடளிலுமே 279 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25 Bhpதிறனையும் 21.8 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மூன்று மாடளுக்கும் இடையே சிறிய ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே இருக்கும். இந்த மாடலின் டெலிவரி சில வாரங்களில் தொடங்கப்படும். மேலும் இந்த மாடலின் சிறந்த வடிவமைப்பு, சிறந்த திரமன் மற்றும் குறைவான விலை ஆகிய காரணங்களால் பெரிய வெற்றியை பெரும் என்றே எதிர்பார்க்கபடுகிறது.
உத்தரகண்டில் உள்ள லோஹியா ஆட்டோ நிறுவன ஆலையில் இந்த மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த மாடல்களின் வெற்றியை தொடர்ந்து மற்ற மாடல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராயல் என்ஃபீல்ட் மாடல்களுக்கு போட்டியாக UM ரெனெகட் கமாண்டோ மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.