BSIV என்ஜினுடன் வெளியிடப்பட்டது புதிய TVS ஜூபிடர்

டிவிஎஸ் நிறுவனம் BSIV என்ஜினுடன் கூடிய புதிய 2017 ஆம் ஆண்டு ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலை ரூ. 53,342 டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது.  இந்த புதிய மாடலில் புதிய BSIV என்ஜின், புதிய ஆட்டோ முகப்பு விளக்கு மற்றும் புதிய சிங்க் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஜேடு கிறீன் மற்றும் மிஸ்டிக் கோல்ட் என இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் புதிய 110 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் BSIV  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  8 bhp (7500 rpm) திறனும்  8 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

விலையில் எந்த மாற்றமும் இல்லை அதே விலையில் தான் இந்த புதிய மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோ ரூம் விலை விவரம்: 
ஜூபிடர் - ரூ. 53,342 
ஜூபிடர் ஸ்ஸ் - ரூ. 55,350 
ஜூபிடர் ஸ்ஸ் டிஸ்க் - ரூ. 57,342

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.