2018 டெல்லி வாகன கண்காட்சி: வெளிப்படுத்தப்பட்டது புத்தம் புதிய ஹீரோ Xபல்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய பைக் நிறுவனமான ஹீரோ புத்தம் புதிய Xபல்ஸ் ஆப் ரோடு பைக்கின் தயாரிப்பு நிலை மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருந்த ஹீரோ இம்பல்ஸ் மாடலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் முந்தய இம்பல்ஸ் மாடலை விட சிறப்பான தோற்றத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் பழமையான  வடிவமைப்பில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் புதுமையான முகப்பு விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 190 மில்லி மீட்டர் டிராவல் கொண்ட முன்புற போர்க்கும் 170 மில்லி மீட்டர் டிராவல் கொண்ட மோனோ ஷாக் பின்புற பார்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 220 மில்லி மீட்டர் தரை இடைவெளியும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 200cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான் விரைவில் வெளியிடப்பட உள்ள எக்ஸ்ட்ரீம் 200  மாடலிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 8.4PS திறனையும் 17.1Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் தோராயமாக ரூ 1.25 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.