2018 டெல்லி வாகன கண்காட்சி: இந்தியாவில் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0

யமஹா நிறுவனம் YZF-R15 V3.0 மாடலை ரூ 1.25 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வெளிநாட்டு சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெளிநாட்டு சந்தையில் உள்ள மாடலுடன் ஒப்பிடும் போது இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள மாடல் சில வேறுபாடுகளை கொண்டுள்ளது. 

யமஹா நிறுவனத்தின் R6 மற்றும் R1 மாடலின் வடிவமைப்பை பயன்படுத்தி இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய LED விளக்குகளுடன் கூடிய முன்புற அமைப்பு, ஏர் இன்டெக், புதிய பியூவல் டேங்க் டிசைன், முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் புதிய பாடி பேரிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தை மாடலில் ABS பிரேக் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்புற போர்க் ஆகியவை கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட புதிய 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் முந்தய மாடலை விட 16.3 சதவீதம் அதிக செயல்திறனும் மற்றும் 4.7 சதவீதம் அதிக மைலேஜும் கொண்டது. இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய யமஹா YZF-R15 V3.0 மாடல் பஜாஜ் பல்சர் RS 200 மற்றும் KTM RC 200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.