இந்தியாவில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 5G

ஹோண்டா நிறுவனம் சத்தமில்லாமல் புத்தம் புதிய ஆக்டிவா 5G ஸ்கூட்டர் மாடலை ரூ 54,876 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டர் மாடலை எந்த சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் வெளியிடாமல் நேரடியாக தனது இணையத்தில் இந்த மாடலை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல் STD மற்றும் DLX என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
Activa 5G DLX - ரூ 56741
Activa 5G STD - ரூ 54876 

இந்த மாடல் ஆக்டிவா 4G மாடலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை, எனினும் இந்த மாடலில் சில கூடுதல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய LED முகப்பு விளக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டர் மாடலில் உள்ளது போன்ற சீட் ஓப்பனிங் சுவிட்ச் ஆகியவை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 109.2 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8 bhp (7500 rpm) திறனும்  9 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. அதே போல் பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டமும் மாற்றப்படவில்லை. இந்த மாடலில் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் காம்பி பிரேக் சிஸ்டம் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆக்டிவா 4G மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.