R நைன் T ரேசர் மற்றும் K 1600 B மோட்டார் பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டது BMW

BMW நிறுவனம் கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் திருவிழாவில் R நைன் T ரேசர் மற்றும் K 1600 B மோட்டார் பைக்குகளை முறையே ரூ 17.3 லட்சம் மற்றும் ரூ 29 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. 

 

BMW R நைன் T ரேசர்

R நைன் T ரேசர் பைக் மாடல் ஒரு ஃகேப் ரேசர் மாடல் ஆகும் மேலும் இந்த மாடல் BMW நிறுவனத்தின் ஆலையிலேயே தயாரிக்கப்படும் ஒரு கஷ்டம் மாடல் ஆகும். இந்த மாடலில் 1170cc கொள்ளளவு கொண்ட ஏர் கூல்டு பாக்ஸர் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110Bhp திறனையும் மற்றும் 116Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ABS சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் R நைன் T ஸ்க்ராம்பிளர் மற்றும் R நைன் T மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

BMW K 1600 B 

இந்த மாடல் K 1600 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு டூரிங் மாடல் ஆகும். இதன் முன்புறம் அப்படியே மற்ற K 1600 மாடல்களில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பின்புறம் முழுவதும் புதுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1649cc கொள்ளளவு கொண்ட ஆறு சிலிண்டர் லிக்யூட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160Bhp திறனையும் மற்றும் 175Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் டிராக்சன் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் ABS சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ரோடு, ரெயின் மற்றும் டைனமிக் என மூன்று டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.