ரூ 9.32 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளார் கேஃப் ரேசர்

டுகாட்டி நிறுவனம்  ஸ்க்ராம்ப்ளார் கேஃப் ரேசர் மாடலை ரூ 9.32 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ஸ்க்ராம்ப்ளார் மாடலின் புதிய  கேஃப் ரேசர் வேரியன்ட் ஆகும். மேலும் இந்த மாடல் தான் ஸ்க்ராம்ப்ளார் மாடல்களிலேயே அதிக விலை கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் பின்புற இருக்கையில் எளிதில் மாற்றக்கூடிய கவ்ல் ஓன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரெல்லி டயருடன் கூடிய 17 இன்ச் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 803 cc கொள்ளளவு கொண்ட L-ட்வின்  எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 74Bhp திறனையும் 68Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்  ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ட்ரியம்ப் ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் ஹார்லி டேவிட்ஸன் அயர்ன் 833 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.