ரூ. 20.06 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாடி மல்டிஸ்ட்ரடா 1200 பைக்ஸ் பீக்

இத்தாலியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாடி இந்தியாவில் ரூ. 20.06 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் மல்டிஸ்ட்ரடா 1200 பைக்ஸ் பீக் மாடலை வெளியிட்டுள்ளது. கொலராடோவில் உள்ள பைக்ஸ் பீக் மலையேற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை ஒட்டி இந்த சிறப்பு பாதிப்பு மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டுகாடி  மல்டிஸ்ட்ரடா மாடல் ஒரு ஆப் ரோடு டூரர் ரகத்தை சேர்ந்தது.  இந்த மாடலில் 1198 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 bhp திறனையும் 136 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த புதிய மாடலில் மேலும் சில ஸ்போர்ட்டியான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட், ஆண்டி லாக் ப்ரேக், மல்டி மீடியா சிஸ்டம்  மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த மாடல் வெறும் 400 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.