ரூ. 15.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாடி மல்டிஸ்ட்ரடா 1260

இத்தாலியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாடி இந்தியாவில் மல்டிஸ்ட்ரடா 1260 மற்றும் மல்டிஸ்ட்ரடா 1260S மாடல்களை முறையே ரூ. 15.99 மற்றும் ரூ. 18.06 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மேம்பாடுகளும் எஞ்சின் செயல்திறன் மேம்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் சிறந்த ஏரோ டைனமிக் வழங்குவதற்காக முன்புற ஃபேரிங் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஆப் வசதியுடன்  கூடிய TFT  ஸ்க்ரீன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் வைர் லெஸ் கீ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றும் இதன் பின்புற வடிவமைப்பும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் வெஹிகிள் ஹோல்டு கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல், ஆபிஸ் மற்றும் ஸ்போர்ட், டூரிங், அர்பன் & என்டுரோ என நான்கு டிரைவிங் மோடுகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மல்டிஸ்ட்ரடா 1260S மாடலில் கூடுதலாக ஸ்கைஹூக் சஸ்பென்ஷன், குயிக் ஷிபிட்ர், கலர் TFT ஸ்க்ரீன் என சில வசதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

டுகாடி மல்டிஸ்ட்ரடா மாடல் ஒரு ஆப் ரோடு டூரர் ரகத்தை சேர்ந்தது. இந்த மாடலில் 1262cc கொள்ளளவு கொண்ட L-ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 bhp திறனையும் 129.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினில் அதிகபட்ச திறன் ஏதும் மாற்றப்படவில்லை என்றாலும் low மற்றும் mid ரேஞ் இழுவைத்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின்  முன்புறத்தில் 320 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 265 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் மற்றும் டியூவல் சேனல் ABS சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மல்டிஸ்ட்ரடா 1260S மாடலின் முன்புறத்தில் 330 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாடல்கள் BMW R 1200 GS மாட்ரிம் ட்ரியம்ப் 1200 XCx  போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.