மீண்டும் வெளியிடப்பட்டது ஹீரோ HF டான்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மீண்டும் HF டான் மாடலை ரூ 37400 ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த மாடல் ஒரிசாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது விரைவில் அணைத்து நகரங்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், புதிய BSIV என்ஜினும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் புதிய கருப்பு நிற வீல் ரிம், சில இடங்களில் கருப்பு நிற பினிஷ், புதிய கிராபிக்ஸ், புதிய முகப்பு விளக்கு மற்றும் புதிய பில்லன் கிராப் ரயில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முன்புறத்தில் 130 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 110 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 9.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 105 கிலோ கிராம் எடை கொண்டது. 

இந்த மாடலில் புதிய 97.2cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8.36PS @ 8000 rpm திறனும் 8.05Nm @ 5000 rpm இழுவைத்திறனும் கொண்டது. இந்த திறன் நான்கு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் பஜாஜ் CT100 மற்றும் TVS ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.