ரூ. 11.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது இந்தியன் ஸ்கௌட் சிக்ஸ்டி

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஸ்கௌட் சிக்ஸ்டி மாடலை  இந்தியாவில் ரூ. 11.99 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.  இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற மிலன் மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில்  கிடைக்கும்.

இந்த மாடல் ஸ்கௌட் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடலில் 999 cc  கொள்ளளவு கொண்ட லிக்யூட் கூல்ட் V - ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 78 Bhp  திறனையும் 89 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 298 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் இரண்டு வீலிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலின் முன்பதிவு  இந்தியாவில் உள்ள 7 டீலர்ஷீப்புகளிலும் தற்போது நடைபெறுகிறது. இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஸ்கௌட், சீப் வின்டேஜ், சீப்டைன், சீப் டார்க் ஹார்ஸ், ஸ்ப்ரிங்பீல்டு மற்றும் ரோடு மாஸ்டர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.