புதிய ஆரஞ்சு வண்ணத்தில் வெளியிடப்பட்டது கவாஸாகி வல்கன் S குரூஸர்

கவாஸாகி நிறுவனம் புதிய ஆரஞ்சு வண்ணத்தில் வல்கன் S குரூஸர் மாடலை ரூ 5.58 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய ஆரஞ்சு வண்ணம் தவிர எஞ்சின் மற்றும் வடிவமைப்பு என மற்ற மாற்றங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் நிஞ்ஜா 650 மாடலில் உள்ள அதே 649 cc கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் பேரலல் ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல்திறன் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 61 bhp (7500 rpm) திறனும் 63Nm (6600rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் தங்களுக்கு ஏற்றவாறு ரைடிங் பொசிசனை மாற்றிக் கொள்ளலாம். இருக்கை மற்றும் ஹேண்டில் பாரின் பொசிசனை மாற்றுவதன் மூலம் ரைடிங் பொசிசனை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்பதிவு அனைத்து ஷோரூம்களிலும் நடைபெறுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.