கவாசாகி - நிஞ்சா 300 30வது ஆனிவெர்சரி எடிசன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது

கவாசாகி - நிஞ்சா 300 ஆனிவெர்சரி எடிசன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது, இந்த மாடலில் வண்ணம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. மற்ற எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு ஆகியமூன்று வண்ணங்களின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 296 cc  கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  

இதன் பெட்ரோல் என்ஜின்  39 bhp (11000 rpm) திறனும் 27 Nm (10000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 10 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2 முதல் 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 160 முதல் 170 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.