வெளியிடப்பட்டது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கவாஸாகி நிஞ்ஜா ZX-10R மற்றும் ZX-10RR

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிஞ்ஜா ZX-10R மற்றும் நிஞ்ஜா ZX-10RR மாடல்களை முறையே ரூ 12.80 லட்சம் மற்றும் ரூ 16.10 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களின் விலை ரூ 6 லட்சம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல்கள் தற்போது SKD (semi-knocked down) ரூட் மூலம் கவாஸாகி நிறுவனத்தின் புனேவில் உள்ள சக்கன் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த இரண்டு மாடலிலும் 998 cc கொள்ளளவு கொண்ட இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 200 bhp (13,000 rpm) / 210 bhp (13,000 rpm) [Ram Air] திறனும் 113.5Nm (11,500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 10 - 15 kmpl மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 330 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.