1.58 லட்சம் அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகிந்திரா - மோஜோ

மோஜோ மாடலை அறிமுக விலையாக 1.58 லட்சம் விலையில் மகிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தீபாவளி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாடல் வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 295CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Bhp திறனும் 30 Nm இழுவை திறனும் தரும். மேலும் இந்தமாடலில் 6 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 320 மிமீ மற்றும்பின்புரத்தில் 240 மிமீ விட்டமும் கொண்ட டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் LED பின்புற விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான இரட்டை முகப்பு விளக்குகள், இரட்டை புகை போக்கிகள் என மிகவும் மாறுபட்ட மற்றும் அழகான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் நேகட் மாடல் வகையை சார்ந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.