மகிந்திரா - மோஜோ மாடலின் முன்பதிவு துவங்கப்பட்டது

2010 ஆம் ஆண்டே மகிந்திரா நிறுவனம்  மோஜோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும் இந்த மாடல் 5 வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ கண்காட்சியில் இந்த மாடல் வெளியிடப்படும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. இறதியாக மகிந்திரா நிறுவனம் செப்டம்பர் மாதம் மோஜோ  மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் முன்பதிவை தொடங்கியது மகிந்திரா நிறுவனம்.

இந்த மாடல் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான இரட்டை முகப்பு விளக்குகள், இரட்டி புகை போக்கிகள் என மிகவும் மாறுபட்ட மற்றும் அழகான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் நேகட் மாடல் வகையை சார்ந்தது.

இந்த மாடலில் 300CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26 Bhp திறனும் 24 Nm இழுவை திறனும் தரும். இந்த மாடல் மகின்றாவின் முதல் அதிக செயல்திறன் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாடல் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.