ஹீரோவின் இரண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்கள்: AE-47 மற்றும் AE-3

ஹீரோ நிறுவனம் 2020 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்திய AE-47 எலெக்ட்ரிக் பைக் மற்றும் AE-3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பார்ப்பவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்பதாக இருந்தது. அந்த மாடல்களின் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஹீரோ AE-47: 
ஹீரோ நிறுவனம் AE-47 மாடலை நேக்ட் ஸ்ட்ரீட் ரேசர் வடிவமைப்பில் வடிவமைத்துள்ளது மற்றும் பார்ப்பதற்கும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடலில் LED  முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், பிளூடூத் கனக்டிவிட்டி உடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், கீலெஸ் ஆக்சஸ், ரியல் டைம் டிரேக்கிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 4kW எலெக்ட்ரிக் ஹப் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 60kmph வேகத்தை வெறும் ௯ வினாடிகளுக்குள் கடந்துவிடும் மற்றும் அதிகபட்சமாக 85kmph வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் பவர் மற்றும் ஈக்கோ என இரண்டு டிரைவிங் மோடுகள், குரூஸ் கண்ட்ரோல் கிரவ்ல் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் மோடு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் 3.5kWh லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஈக்கோ மோடில் 160km ரேஞ்சும் பவர் மோடில் 85km ரேஞ்சும் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். 

ஹீரோ AE-47 மாடல் இந்த வருட இறுதிக்குள் தோராயமாக ஒரு லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ AE-3:
ஹீரோ AE-3 மாடல் மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஹீரோவின் முதல் ட்ரைக் வடிவமைப்பிலான மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலிலும் LED  முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், பிளூடூத் கனக்டிவிட்டி உடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் சமநிலையில் வைப்பதற்கான கைரோஸ்கோப் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 5.5kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 4kWh லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக 80kmph. வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் 100km ரேஞ் கொண்டது எனவும் தெறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். 
 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.