மேம்படுத்தப்பட்ட புதிய பஜாஜ் அவென்ஜர் மாடலின் படங்கள்

பஜாஜ்  நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது. வண்ணங்களும் ஸ்டிக்கரும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலாய் வீல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடலில் உள்ள அலாய் வீல்  போலவே உள்ளது. பஜாஜ் நிறுவனம் மேலும்  இரண்டு புதிய க்ரூசர் மாடலை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலில் பல்சர் 200 NS மாடலில் உள்ள அதே என்ஜின் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  பெட்ரோல் என்ஜின்  23.5 bhp (9500rpm)   திறனும் 18.3 NM (8000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

மேலும் இந்த மாடலின் விலையில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.