வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹார்லி டேவிட்சன் ரோடுஸ்டெர்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புத்தம் புதிய ரோடுஸ்டெர்  மாடலை அமெரிக்காவில் வெளியிட்டது. இந்தியா மதிப்பில் சுமார் ரூ.7.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த மாடலை புகழ் பெற்ற தனது போர்ட்டி எய்ட் மாடலின் அடிப்படையில் வடிவமைத்துள்ளது.  போர்ட்டி எய்ட் மாடலிளிருந்து நிறைய மாற்றங்களை செய்து இந்த மாடலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ப்ரேக் சிஸ்டம், முன்புற போர்க், அலாய் வீல், டயர், இன்ஸ்ட்ருமென்ட், ஹேண்டில் பார்  ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடலிலும் அதே 1200cc V ட்வின் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 103 Nm  இழுவைதிறனை வழங்கும். விரைவில் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் 9 முதல் 10 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.