ரூ 89,578 விலையில் வெளியிடப்பட்டது ABS உடன் கூடிய சுசூகி ஜிக்சர்

சுசூகி நிறுவனம் ABS பிரேக் உடன் கூடிய ஜிக்சர் மாடலை ரூ 89,578 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. சுசூகி நிறுவனம் ஏற்கனவே 150cc எஞ்சின் செக்மென்ட்டில் ஜிக்சர் SF மற்றும் இன்ட்ரூடர் மாடல்களை ABS பிரேக் உடன் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய சுசூகி ஜிக்சர் மாடலில் சிங்கிள் சேனல் ABS பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 7,841 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8 bhp (8000rpm)  திறனும் 14 NM (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 63 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

ABS பிரேக் உடன் கூடிய ஜிக்சர் மாடல் ப்ளூ, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடல் TVS அப்பாச்சி RTR  160 4V, பஜாஜ் பல்சர் NS 160 மற்றும் ஹோண்டா CB ஹார்னெட் 160R போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.