வெளியிடப்பட்டது சுசூகி இன்ட்ரூடர் சிறப்பு பதிப்பு மாடல்கள்

சுசூகி நிறுவனம் தனது ஆரம்ப நிலை குரூஸர் மாடலான இன்ட்ரூடர் 150 மற்றும் இன்ட்ரூடர் 150 FI மாடல்களின் சிறப்பு பதிப்பு மாடல்களை முறையே ரூ 1,04,667 மற்றும் ரூ 1,11,467 சென்னை ஷோரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சிவப்பு நிற அலங்காரங்களுடன் கூடிய மேட் கருப்பு நிற வண்ணமும் மற்றும் பில்லியன் பேக்ரெஸ்ட் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8ps@8000rpm திறனும் 14Nm@6000rpm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ் மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ஜிக்சர் மாடலின் டயர், பிரேக், சஸ்பென்ஷன், பிரேம் ஆகியவை இந்த மாடலுக்கேற்ப மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் LED பின்புற விளக்குகள், புதுமையான இரட்டை புகை போக்கி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.