புதிய FI என்ஜினுடன் வெளியிடப்பட்டது சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர்

சுசூகி நிறுவனம் தனது ஆரம்ப நிலை குரூஸர் மாடலான இன்ட்ரூடர் 150 மாடலை புதிய FI என்ஜினுடன் ரூ 1,11,063 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஜிக்சர்  FI மாடலில் உள்ள அதே 150cc எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடல் முந்தய மாடலை விட கூடுதல் மைலேஜையும், மென்மையான செயல்திறனையும் வழங்கும். இந்த மாடல் இன்ட்ரூடர் M1800R மற்றும் M800 போன்ற சுசூகி நிறுவனத்தின் பெரிய குரூஸர் மாடல்களின் வடிவங்களை பயன்படுத்தி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜிக்சர் மாடலின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ஜிக்சர் மாடலின் டயர், பிரேக், சஸ்பென்ஷன், பிரேம் ஆகியவை இந்த மாடலுக்கேற்ப மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் LED பின்புற விளக்குகள், புதுமையான இரட்டை புகை போக்கி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிக்சர் FI மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல்திறன் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8ps@8000rpm திறனும் 14Nm@6000rpm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ் மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பஜாஜ் அவெஞ்சர் 150 மாடலுக்கு போட்டியாக நிலைநிநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.