புதிய இரட்டை வண்ணத்தில் வெளியிடப்பட்டது சுசுகி லெட்ஸ்

சுசூகி நிறுவனம் லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலை கூடுதலாக புதிய இரட்டை வண்ணத்தில் ரூ 48,193 ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தற்போது கூடுதலாக ராயல் ப்ளூ/ மேட் கருப்பு, கிளாஸ் ஸ்பார்க்ள் கருப்பு மற்றும் ஆரஞ்சு/ மேட் கருப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடலில் 112.8 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது  8.5 bhp (7500rpm)   திறனும் 8.8 NM (6500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் ஹோண்டா ஆக்ட்டிவா i, TVS ஸ்கூட்டி ஸெஸ்ட் மற்றும் ஹீரோ ப்ளெஷர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.