ரூ 1 லட்சம் ஆராம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ 1 லட்சம் ஆராம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் ட்ரம் பிரேக் கொண்ட அர்பன் வேரியன்ட் ரூ 1 லட்சம் ஷோரூம் விலையிலும் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்ட பிரீமியம் வேரியன்ட் ரூ 1.15 லட்சம் ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்பதிவையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த மாடலை இதன் இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடலின் விநியோகம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் நிறுவனம் கிளாசிக் சேட்டக் ஸ்கூட்டர் மாடலின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு தான் இந்த புதிய சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடலில் LED முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், முழுவதும் டிஜிட்டல் மயமான LCD இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் பிளூடூத் மொபைல் கனக்டிவிட்டி என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 12-இன்ச் அலாய் வீல், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 4kW மற்றும் 16Nm இழுவைத்திறன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 95km ரேஞ் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3kWh மற்றும் IP67-certifed பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 70,000km தூரம் வரை இந்த பேட்டரி உழைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.