வெளியிடப்பட்டது ABS உடன் கூடிய புதிய பஜாஜ் பல்சர் NS200

பஜாஜ் நிறுவனம் ABS உடன் கூடிய புதிய பல்சர் NS200 நேக்ட் மாடலை ரூ 1.09 லட்சம் மும்பை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் முன்புற வீலுக்கு மட்டும் ABS சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை சாதாரண மாடலை விட தோராயமாக ரூ 12,000 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் தோற்றம் மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 199.5 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த என்ஜின்  23.5 bhp (9500rpm)   திறனும் 18.3 NM (8000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 45 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் TVS அப்பாச்சி மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் க்ரே வண்ண கலவையுடன் மூன்று இரட்டை வண்ணத்தில் கிடைக்கிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.